Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

17th July 2023 21:54:33 Hours

இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவிற்கு புதிய தலைவி

இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவியாக திருமதி உத்பலா ஹெட்டியாராச்சி அவர்கள் வெள்ளிக்கிழமை (ஜூலை 14) இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் சமய ஆசீர்வாதங்கள் மற்றும் வாழ்த்துக்களுக்கு மத்தியில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் முன்னாள் படைத் தளபதியின் துணைவியார் திருமதி தனுஷா வீரசூரியவைத் தொடர்ந்து அவர் பதவியேற்றார்.

இந் நிகழ்வில் பல இலங்கை இலேசாயுத காலாட் படையணி சிரேஷ்ட அதிகாரிகள்,அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.