10th October 2022 21:49:16 Hours
இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் மூலம் தொடங்கப்பட்ட மாபெரும் நலன்புரி திட்டத்தின் கீழ் இலங்கை சமிக்ஞைப் படையணி தலைமையகத்தில் சனிக்கிழமை (8) இலங்கை சமிக்ஞைப் படையணி சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 1500 பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு 4 மில்லியன் ரூபாய் மதிப்பிலான பாடசாலை துணைக்கருவிகள் மற்றும் எழுதுபொருட்களை வழங்கப்பட்டன.
இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி. ஜேஏ சஷிகா ஹேரத் அவர்களின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாகக் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்கள் கலந்துகொண்டதுடன், தலைவியின் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்வில், தரம் 5 புலமைப்பரிசில் சாதனை படைத்த மூவர் உட்பட இலங்கை சமிக்ஞைப் படையணியின் குடும்பங்களைச் சேர்ந்த 52 மாணவர்கள் பயனாளிகளாக கலந்துகொண்டனர். மேலும் இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவு திங்கட்கிழமை (10) சிறுவர் தினம் மற்றும் இராணுவ தினம் ஆகிய இரு தினங்களையும் கொண்டாடவுள்ளது.
பிரதம விருந்தினரான திருமதி ஜானகி லியனகே தனது சொந்த சகோதரியான இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் நிறைவேற்று உறுப்பினரான திருமதி கங்கா ஹேரத்தின் அருகில் அமரவைக்கப்பட்டது முற்றிலும் தற்செயல் நிகழ்வாகும், அவர் ஊடகப் பணிப்பாளர் பிரிகேடியர் ரவி ஹேரத்தின் மனைவியும் ஆவார்.
அண்மைக் காலங்களில் இலங்கை சமிக்ஞைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் அனைத்து உறுப்பினர்களும் பலதரப்பட்ட நிதி திரட்டும் திட்டங்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் திரட்டப்பட்ட நிதியினால் இந் நிகழ்வுக்கான நிதி வழங்கப்பட்டது.
பிரதம விருந்தினர் அந்த ஊக்கத்தொகையை பயனாளிகளுக்கு வழங்கியதுடன் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்ததுடன், நடனம் மற்றும் பிற அழகியல் அம்சங்கள் அன்றைய நிகழ்வுகள் நிறைவடைந்தது.