26th September 2023 08:14:42 Hours
இலங்கை இராணுவ மருத்துவ சேவைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நில்மினி பெர்னாண்டோவின் ஆலோசனையின் பேரில், ஏற்பாடு செய்யப்பட்ட வெற்றிகரமான வாழ்க்கைக்கான நேர்மறை சிந்தனை மற்றும் தினசரி அலுவலக வேலையை சமநிலைப்படுத்த ஆரோக்கியமான உறவைப் பேணுதல்’ என்ற தலைப்பிலான விரிவுரை சனிக்கிழமை (செப்டம்பர் 16) இராணுவ மருத்துவமனை கேட்போர்கூடத்தில் நிகழ்த்தப்பட்டது.
இலங்கை இராணுவ மருத்துவ சேவைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவியின் அழைப்பின் பேரில், திருமதி ஓஷதி டி சில்வா விரிவுரையை ஆற்றினார், இதில் 250 க்கும் மேற்பட்ட சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.
அதே சந்தர்ப்பத்தில் இராணுவ குடும்பத்தின் நரம்பியல் சிக்கலில் இருந்து விடுபட்ட குழந்தை ஒன்றுக்கு இலங்கை இராணுவ மருத்துவ சேவைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவினரால் மடிக்கணினி ஒன்று பரிசாகப் வழங்கப்பட்டது.