06th January 2022 08:32:32 Hours
இலங்கை இராணுவ சேவைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவு அதன் தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை (2) இராணுவக் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வை நடாத்தியது.
இலங்கை இராணுவ சேவைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நிஷாந்தி அபேரத்ன நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த (சா/த) மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகளில் சாதனை படைத்தவர்கள் உதவித்தொகையை பெற்றுக்கொண்டனர்.
இலங்கை இராணுவ சேவைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் மற்றுமொரு செயற்திட்டமாக தலைமையகத்தில் காளான் வளர்ப்பிற்கான புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்நிகழ்வில் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், பணிநிலை அதிகாரிகள் மற்றும் இலங்கை இராணுவ சேவைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.