24th June 2022 10:21:27 Hours
இலங்கை இராணுவ சேவைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி துஷாரி வணிகசேகர அவர்களின் கருத்தாக்கத்தின் பேரில் அண்மையில் கன்னியாஸ்திரிகளுக்கு அன்னதானம் மற்றும் இலங்கை இராணுவ சேவைப் படையணியின் 40 கர்ப்பிணிப் பெண் சிப்பாய்களுக்கு அத்தியாவசியப் பரிசுப் பொதிகளை இலங்கை இராணுவ சேவைப் படையணி தலைமையகத்திற்கு அழைத்து வழங்கப்பட்டது.
அந்த பௌத்த கன்னியாஸ்திரிகள் ஊர்வலமாக அந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, 'புத்த பூஜை' மற்றும் மங்கள விளக்கு ஏற்றி, மத அனுஷ்டானங்களுக்குப் பின் 'செத் பிரித்' பாராயணங்களுடன் அந்த கர்ப்பிணிப் பெண்கள் ஆசிர்வதிக்கப்பட்டதுடன், அந்தப் பெண்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள், சிறப்புப் பரிசுப் பொதிகள் வழங்கப்படுவதற்கு முன், அந்த கன்னியாஸ்திரிகள் மற்றும் அந்த கர்ப்பிணிகளுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.
இலங்கை இராணுவ சேவைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், அவர்களின் தலைவியை அன்பாக வரவேற்றதுடன், கூட்டத்தில் உரையாற்றி நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைக்குமாறு அவரை அழைத்தனர்.
இலங்கை இராணுவ சேவைப் படையணியின் படைத் தளபதியும் போர் கருவி பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் ஹிரோஷ வணிகசேகர, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.