24th June 2022 10:34:47 Hours
இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் வருடாந்த பொதுக் கூட்டம் ஜூன் 4 ஆம் திகதி பனாகொட இராணுவ சேவைப் படையணி தலைமையக மாநாட்டு மண்டபத்தில் 80 சேவை வனிதையரின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
அதற்கமைய இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி துஷாரி வாசனா வணிகசேகர தலைமையில் இடம்பெற்ற நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வீரமரணம் அடைந்த இராணுவ சேவைப் படையணி போர் வீரர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் செயலாளர் அவர்களின் வரவேற்பு உரையை தொடர்ந்து எதிர்வரும் வருடத்தின் எதிர்கால நலன்புரித் திட்டங்கள் தொடர்பாகவும் கடந்த வருடத்தின் திட்டங்கள் தொடர்பாகவும் தலைவி அவர்கள் தனது உரையில் எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து, வாழ்த்துக்களுக்கு மத்தியில் புதிய நிர்வாகிகள் தேர்வும் நடைபெற்றது. உறுப்பினர்களும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். முடிவடைந்த வருடத்தில் பிரிவின் திட்டங்களைப் பாராட்டினர். வருடாந்த பொது கூட்டத்தின் பின்னர், லெப்டினன் கேணல் சுஜித் எதிரிசிங்க அவர்கள் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்களுக்கான ஊக்கமளிக்கும் விரிவுரையை நிகழ்த்தியதுடன் வீட்டுத் தோட்டம் தொடர்பான கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.
கலாசார சாதனைகள் மற்றும் ஏனைய பொழுதுபோக்கு அம்சங்கள் மாலையை வண்ணமயமாக்கின. அங்கு அனைத்து பிரிவு தலைவர்களும் கலந்து கொண்டனர். இராணுவ சேவைப் படையணியின் படைத்தளபதியும் உபகரண பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் ஹிரோஷ வணிகசேகர, இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.