29th June 2022 10:36:16 Hours
இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியாக திருமதி துஷாரி வணிகசேகர 2022 ஏப்ரல் 04 ஆம் திகதி இராணுவ சேவைப் படையணி தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார். நாட்டில் நிலவும் கொவிட் 19 நோய் தொற்றின் காரணமாக சுகாதார வழிகாட்டுதல்களுக்கமைய சம்பிரதாய நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இராணுவ சேவைப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹிரோஷ வணிகசேகர, இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் சில சிரேஷ் உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.