28th August 2022 09:54:20 Hours
இலங்கை இராணுவ சேவைப் படையணியின் சேவை வனிதயைர் பிரிவு 2022 ஆகஸ்ட் 12 அன்று கட்டுநாயக்க 2 வது (தொ) இலங்கை இராணுவ சேவைப் படையணியில் தேசிய இரத்த மாற்று சேவையுடன் இணைந்து இரத்த தானம் செய்யும் திட்டத்தை நடத்துவதற்கு உதவியது.
இலங்கை இராணுவ சேவைப் படையணியின் சேவை வனிதயைர் பிரிவின் தலைவி திருமதி துஷாரி வனிகசேகர அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. 2 வது (தொ) இலங்கை இராணுவ சேவைப் படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் 80 க்கும் மேற்பட்ட நன்கொடையாளர்கள் இரத்தம் வழங்க முன்வந்ததுடன், அவர்களுக்கு இதே நிகழ்வில் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டப்பட்டனர்.