11th October 2022 11:10:04 Hours
திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் ஒருங்கிணைப்புடன் (இலங்கை இராணுவ சேவைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவு) தேசிய தொழிற்பயிற்சி பாடநெறிச் சான்றிதழ் பாடநெறியை நடாத்தியதுடன், அதனை வெற்றிகரமாக நிறைவு செய்த 14 இராணுவ வீரர்களுக்கு சான்றிதழ்களை வழங்கியது.
செப்டம்பர் 17 பனாகொட இலங்கை இராணுவ சேவைப் படையணி தலைமையகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் 30க்கும் மேற்பட்ட உலர் உணவுப் பொதிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
6 வது இலங்கை இராணுவ சேவைப் படையணியின் கட்டளை அதிகாரி, சிப்பாய்கள் மற்றும் இலங்கை இராணுவ சேவைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி துஷாரி வணிகசேகர, அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் பணிப்பாளர் நாயகம், திரு. டபிள்யூஎம்ஆர்பி வீரசேகர, திறன் ஆலோசகர் திருமதி மனோரி ரொட்ரிகோ மற்றும் பலர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.