09th December 2022 22:43:44 Hours
திஸ்ஸாவெவ இலங்கை இராணுவ சேவைப் படையணி பயிற்சி பாடசாலையின் சிவில் ஊழியர்களின் பொருளாதாரக் கஷ்டங்களைப் போக்குவதற்கு இலங்கை இராணுவ சேவைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவு 2022 நவம்பர் 26 அந்தக் குடும்பங்களின் மாணவர்களுக்கு புத்தகங்கள் அடங்கிய பாடசாலை உபகரணங்களை விநியோகித்தது.
இலங்கை இராணுவ சேவைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி துஷாரி வணிகசேகர அவர்கள் பாடசாலை வளாகத்தில் அந்த உபகரணங்களை விநியோகிக்கும் நிகழ்வில் இணைந்து கொண்டார்.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட திருமதி துஷாரி வணிகசேகர அவர்களால் இலங்கை இராணுவ சேவைப் படையணியின் சிவில் ஊழியர்களின் பிள்ளைகள் மற்றும் மனைவியர்களுக்கு மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்பட்டன.
இலங்கை இராணுவ சேவைப் படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் மொஹான் பிரேமரத்ன, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இத்திட்டத்தில் இணைந்து கொண்டனர்.