17th December 2022 12:02:15 Hours
இலங்கை இராணுவ சேவைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி துஷாரி வணிகசேகர, தம்புள்ளை இப்பன்கடுவவில் வசிக்கும் பெண் சிப்பாயின் நோயுற்ற தாயாருக்கு அண்மையில் தனது உறுப்பினர்களின் ஒத்துழைப்பில் புதிய கழிவறையை நிர்மாணித்து கொடுத்தனர்.
முதலாவது இலங்கை இராணுவ சேவைப் படையணியின் பெண் சிப்பாயின் தாயார் கடுமையான நோய் காரணமாக ஓரளவு கட்டப்பட்ட, சுகாதார வசதிகள் இல்லாத வீட்டில் வசிந்து வந்தார்.
சேவை வனிதயைர் பிரிவின் தலைவி உட்பட் உறுப்பினர்கள், முதலாவது இலங்கை இராணுவ சேவைப் படையணியின் அதிகாரிகள், சிப்பாய்களுடன், தேவையான பொருட்களை சேகரித்து புதிய சுகாதார வசதிகளை கொண்ட புதிய கழிவறை நிர்மாணித்துள்ளனர். முதலாவது இலங்கை இராணுவ சேவைப் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஜீகேவீ தர்மசேன அவர்கள் சுகாதார வசதிகளுடன் கூடிய புதிய கழிவறை கட்டுமானப்பணியை உன்னிப்பாகக் கண்காணித்து வழிகாட்டுதல்களை வழங்கினார்.
இலங்கை இராணுவ சேவைப் படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் மோகன் பிரேமரத்ன இராணுவ சேவைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் இராணுவ சேவைப் படையணியின் சேவை வனிதயைர் பிரிவின் உறுப்பினர்கள் பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.