23rd March 2023 08:18:31 Hours
இலங்கை இராணுவ சேவைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவு 11 மார்ச் 2023 அன்று பனாகொட இலங்கை இராணுவ சேவைப் படையணி தலைமையகத்தில் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடியது. இதன் பிரதம அதிதியாக இலங்கை இராணுவ சேவைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி துஷாரி வணிகசேகர அவர்கள் கலந்து கொண்டார்.
"போர் வீரர்களின் பங்கு" எனும் தொனிப்பொருளில் ஊக்கமளிக்கும் விரிவுரையில் நிபுணரான லெப்டினன் கேணல் சுஜித் சமிந்த எதிரிசிங்க அவர்களினால் விரிவுரையும் நடாத்தப்பட்டது.
நிகழ்வின் இரண்டாவது பிரிவாக, சமையற்கலைத் துறையின் நிபுணரான எக்ஸிகியூட்டிவ் செப் குமார், 'மாஸ்டர் செப் ரகசியங்கள் அன்றாட வாழ்க்கைக்கு எவ்வாறு பொருந்தும்' என்ற தலைப்பில் அடிப்படை செயல்விளக்கங்களுடன் விரிவுரையை ஆற்றினார்.
நிகழ்வின் இறுதியில் பிரிகேடியர் எம்டிபிஎம்எஸ் ஜயமான்ன அவர்களின் மகளான திருமதி ஷெனாலி ஜயமான்ன 'அழகு கலாசாரத்தின் விஞ்ஞானம்' என்ற தலைப்பில் விரிவான விரிவுரையை நிகழ்த்தினார்.