27th March 2023 06:02:25 Hours
முதலாவது இலங்கை இராணுவ சேவைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவு 2022 மார்ச் 17 கம்புருப்பிட்டிய காயமுற்ற போர்வீரர்களின் பயன்பாட்டிற்கான 'அபிமன்சல 2' நல விடுதிக்கு சுகாதாரப் பொருட்கள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களை நன்கொடையாக வழங்கியது.
லெப்டினன் கேணல் ஜிகேவி தர்மசேன மற்றும் அவரது துணைவியார் ஆகியோரின் ஆதரவுடனும் இலங்கை இராணுவ சேவைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவினால் ஓரளவு வழங்கப்பட்ட நிதியுதவிலும் இலங்கை இராணுவ சேவைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி துஷாரி வணிகசேகர அவர்கள் வழங்கிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை இராணுவ சேவைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி, நிலைய தளபதி, சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்