22nd April 2023 11:27:30 Hours
புத்தாண்டை முன்னிட்டு இராணுவ சிவில் ஊழியர்கள் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கு உலர் உணவுப் பொதிகள் மற்றும் பாடசாலை உபகரணங்களை விநியோகிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை (மார்ச் 30) பனாகொட முதலாவது இலங்கை இராணுவ சேவைப் படையணியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இலங்கை இராணுவ சேவைப் படையணியில் சேவையாற்றும் 37 சிவில் ஊழியர்கள், இலங்கை இராணுவ சேவைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி துஷாரி வணிகசேகர அவர்கள் கலந்துகொண்ட விழாவின் போது இந்த பரிசில்களை பெற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி நிலைய தளபதி பிரிகேடியர் எச்ஏஎம் பிரேமரத்ன மற்றும் முதலாவது இலங்கை இராணுவ சேவைப் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஜிகேவீ தர்மசேன ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் நடத்தப்பட்டது. நிகழ்ச்சி முடிவின் போது பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் இசை நிகழ்ச்சியுடன் இரவு உணவும் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.