01st June 2023 09:17:44 Hours
இலங்கை இராணுவ சேவைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவினால் ஞாயிற்றுக்கிழமை (மே 21) இலங்கை இராணுவ சேவைப் படையணியின் தலைமையகத்தின் கீழ் சேவையாற்றும் சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் குடும்பங்களின் கர்ப்பிணிப் பெண்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இலங்கை இராணுவ சேவைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி துஷாரி வணிகசேகரவின் கருத்தின் அடிப்படையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந் நிகழ்வின் போது, 29 கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு தலா ரூ. 10,000.00.வும் மேலும், 07 பௌத்த பிக்குகளுக்கு அதே இடத்தில் அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சமய நிகழ்வுகளில் அதிகமான சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அன்றைய நிகழ்வுகள் நிறைவடைவதற்கு முன்னர் அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டதுடன், இலங்கை இராணுவ சேவைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் உறுப்பினர்கள் நிகழ்வுகளில் பங்கேற்றனர்.