09th July 2023 08:54:11 Hours
இராணுவ சேவைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் வருடாந்த பொதுக் கூட்டம் சனிக்கிழமை (ஜூன் 24) இலங்கை இராணுவ சேவைப் படையணி தலைமையகத்தில், இலங்கை இராணுவ சேவைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி. துஷாரி வணிகசேகர அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
சேவை வனிதயைர் கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வு ஆரம்பமானதுடன், இந்த சந்திப்பின் போது, போர்வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட மற்றும் இன்னும் நடைமுறைப்படுத்தப்படாத பல்வேறு நலன்புரி செயற்பாடுகள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.