20th August 2023 20:46:55 Hours
இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவினால் பனாகொட இலங்கை இராணுவ சேவைப் படையணி தலைமையகத்தில் இலங்கை இராணுவ சேவைப் படையணி குடும்பத்தில் சேவையாற்றும் சிவில் பணியாளர்கள் மற்றும் சிப்பாய்களின் தெரிவு செய்யப்பட்ட பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களை விநியோகிக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி துஷாரி வணிகசேகரவின் கருத்தின் அடிப்படையில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
சனிக்கிழமை (ஓகஸ்ட் 18) கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், மாணவர்கள் படிப்பதற்குத் தேவையான பாடசாலை உபகரணப் பொதிகளை பெற்றுக்கொண்டனர்.
இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பயனாளிகள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.