06th September 2023 18:32:43 Hours
யாழ். போதனா வைத்தியசாலையில் இரத்தப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, 5 வது இலங்கை இராணுவ சேவைப் படையணியின் படையினர் வடக்கு முன்னரங்க பராமரிப்புப் பகுதியின் அதிகாரிகள் உட்பட 200 க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் அண்மையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு இரத்த தானம் செய்தனர்.
யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்தியர் எம்.பிரதீபன், வைத்தியர் ஆர்.கண்ணன் மற்றும் திரு.ரவினதாசா ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவின் ஆதரவுடன் பலாலியில் உள்ள 5 வது இலங்கை இராணுவ சேவைப் படையணி முகாம் வளாகத்தில் சனிக்கிழமை (ஓகஸ்ட் 26) இரத்தம் வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு முன்னரங்க பராமரிப்புப் பகுதியின் ஆசிர்வாதத்துடன் இலங்கை இராணுவ சேவைப் படையணியின் படைத்தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி துஷாரி வணிகசேகர மற்றும் 5 வது இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி அயோமா ஜயசிங்க ஆகியோரின் ஒருங்கிணைப்பில் 5 வது இலங்கை இராணுவ சேவைப் படையணி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டி.எம். ஜயசிங்க அவர்களின் மேற்பார்வையில் யாழ் குடாநாட்டில் சேவையாற்றும் அனைத்து இலங்கை இராணுவ சேவைப் படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பங்கேற்புடன் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மருத்துவ உதவியாளர்கள், யாழ் இரத்த வங்கி ஊழியர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் இலங்கை இராணுவ சேவைப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.