Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

23rd January 2022 07:48:02 Hours

இராணுவ புலனாய்வு பாடசாலையில் இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையரின் நிகழ்வுகள்

இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவு இராணுவ புலனாய்வு படையணியின் உயிர்நீத்த வீரர்களின் 29 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை வெள்ளிக்கிழமை (21) அம்பலாங்கொட கரந்தெனிய இராணுவப் புலனாய்வு பாடசாலையில் நடாத்தியது.

இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி மனோரி சல்லே அவர்களின் அழைப்பின் பேரில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் இந்த நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

திருமதி சல்லே மலர்க்கொத்து வழங்கி, அன்றைய பிரதம விருந்தினரை வரவேற்றதுடன், நிகழ்ச்சி அரங்கிற்கு அழைத்துச் சென்றார். பின்னர் இராணுவ புலனாய்வு படையணியின் வரலாறு, இதுவரை முடிக்கப்பட்ட மற்றும் இன்னும் செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் பற்றிய ஆவணப்படம் பார்வையாளர்கள் முன் திரையிடப்பட்டது, இது இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் சாதணைகள் பற்றி தெரிந்து கொள்வதற்கு சிறப்பு விருந்தினருக்கு உதவியாக இருந்தது.

இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவு தயாரித்த நினைவுச் சின்னங்கள், எண்ணெய் வகைகள் மற்றும் கருவாபட்டை சார்ந்த பொருட்கள் கண்காட்சியில் விற்பனை செய்யப்படுவதைக் காண அன்றைய பிரதம விருந்தினர் அழைத்துச் செல்லப்பட்டார். திருமதி.சுஜீவா நெல்சன், திருமதி. சல்லே ஆகியோர் தயாரிப்புகளை பார்வையிட்டதுடன், தயாரிப்புகளின் தரம் மற்றும் உற்பத்தி செயல்முறைக்காக சேவை வனிதையர் உறுப்பினர்களைப் பாராட்டினார்.

இந் நிகழ்ச்சியின் நினைவாக இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களுடன் திருமதி சுஜீவா நெல்சன் அவர்கள் குழு படம் எடுத்துக் கொண்டனர்.