31st March 2022 12:43:19 Hours
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவு சனிக்கிழமை (12) கரந்தெனிய இராணுவ புலனாய்வு படையணி தலைமையத்தில் பல செயற்றிட்டங்களை ஏற்பாடு செய்தது.
இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் பிரதி தலைவி திருமதி ரஜிதா ஜயசூர்ய அவர்களால் நடத்தப்பட்ட ‘இராணுவ மனைவியின் பங்கு, வேலை மற்றும் வீட்டு சமனிலை பேணல் என்ற தலைப்பில் ஊக்கமளிக்கும் சொற்பொழிவுடன் அன்றைய நாள் தொடங்கியது. அதன்பின், ‘ஸ்லீக் பிரைடல் லவுஞ்ச்’ தனியார் நிறுவனத்தின் திருமதி நவோதி வெடிக்கார, ‘அழகு மற்றும் அழகு கலாசாரத்தை மேம்படுத்துதல்’ என்ற தலைப்பில் விரிவுரை மற்றும் செயல்விளக்கத்தை நடத்தினார்.
இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி மனோரி சல்லே இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், இராணுவ புலனாய்வு படையணி பெண் அதிகாரிகள் மற்றும் சில பெண் சிப்பாய்கள் அன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.