20th April 2022 16:22:16 Hours
இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி மனோரி சல்லே அவர்களுடன் இணைந்து, அம்பலாங்கொடை வருசவிதான முதியோர் இல்லத்தில் மார்ச் மாதத்திற்கான மாதாந்த அன்னதானம் வழங்கினர்.
இத்திட்டத்தின் கீழ், சேவை வனிதையர் பிரிவின் வழமையான திட்டமாக இந்த முதியோர் இல்லத்தில் வசிக்கும் 16 பேருக்கு அன்றைய தினம் மூன்று வேளை உணவுகளும் (காலை, மதிய உணவு மற்றும் இரவு உணவு) வழங்கப்பட்டன.
இந் நிகழ்ச்சி மார்ச் 26 நடைபெற்றதுடன், இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி, இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.