Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

11th September 2023 19:35:55 Hours

மறைந்த இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சிப்பாய்க்கு புதிய வீடு

இலங்கை இராணுவ பொலிஸ் படையணி தலைமையகம் 2 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் 2020 ம் ஆண்டு பணிபுரியும் போது மறைந்த அவர்களின் கோப்ரலின் நினைவாக 2 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சிப்பாய்களுடன் இணைந்து இறந்த சிப்பாயின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுக்கு அங்குருவெல்ல பகுதியில் புதிய வீட்டை நிர்மாணித்து வெள்ளிக்கிழமை (செப்டெம்பர் 8) சம்பிரதாயபூர்வமாக குடும்பத்திடம் ஒப்படைத்தனர்.

மறைந்த கோப்ரல் ஜி.எம்.ஆர்.எஸ்.அபேரத்னவின் மனைவி புதிய வீட்டின் சாவியையும் பல பரிசுப் பொதிகளையும் இலங்கை இராணுவத்தின் ஒழுக்க பாதுகாப்பு பணிப்பாளரும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏசிஏ டி சொய்சா யூஎஸ்பீ எச்டிஎம்சி எல்எஸ்சி அவர்களிடமிருந்து அவரது மகன் (7 வயது) மற்றும் மகள் (3 வயது) முன்னிலையில் பெற்றுக்கொண்டனர்.

2 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி மறைந்த கோப்ரல் ஜி.எம்.ஆர்.எஸ்.அபேரத்ன எதிர்பாராதவிதமாக 7 மே 2020 அன்று வீதி விபத்து காரணமாக குடும்பத்திற்கு பொருத்தமான வீடற்ற நிலையில் காலமானார்.

இரண்டு படுக்கையறைகள், ஒரு சாப்பாட்டு அறை, ஒரு சமையலறை மற்றும் குளியலறையுடன் கூடிய வீட்டுத் திட்டம், கனடாவில் திருமதி.சமிளா ஜெயதிலக்க மற்றும் அவரது கணவர் திரு.சொண்டர்ஸ் ஜெயதிலக்க ஆகியோரின் முக்கிய அனுசரணையுடன் தொழில்நுட்ப மற்றும் மனித வளம் இராணுவ பொலிஸ் படையணி மற்றும் இராணுவ பொறியியல் சேவைகள் படையணி மூலம் வழங்கப்பட்டது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் ஆசிர்வாதத்துடன் இலங்கை இராணுவத்தின் ஒழுக்க பாதுகாப்பு பணிப்பாளர் மற்றும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மறைந்த இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சிப்பாயின் இந்த வீடு நிர்மாணத் திட்டம் நிறைவு பெற்றது.

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே மற்றும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி பிரியந்திகா டி சொய்சா அவர்களும் இணைந்து தேவையான பண உதவிகள் மற்றும் அத்தியாவசிய வீட்டுப் பொருட்களை வழங்கினர்.

மேலும் இவ்வீட்டு நிர்மாண திட்டத்திற்கு இராணுவ பொலிஸ் பாடசாலை தளபதி உட்பட அனைத்து இலங்கை இராணுவ பொலிஸ் படையணி கட்டளை அதிகாரிகளும் பல வழிகளில் உதவிகளை வழங்கினர்.

2 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி முன்னாள் கட்டளை அதிகாரிகளான லெப்டினன் கேணல் ஆர் விதானராச்சி யுஎஸ்பீ எல்எஸ்சி, லெப்டினன் கேணல் என்பீஈ நெரங்கம யுஎஸ்பீ எல்எஸ்சி மற்றும் தற்போதைய கட்டளை அதிகாரி மேஜர் கேஎன் இந்திரஜித் யுஎஸ்பீ எல்சிஎஸ் ஆகியோரின் வழிகாட்டுதல்கள் இத்திட்டத்தினை வெற்றிகரமாக செயற்படுத்தினர்.

இலங்கை இராணுவ பொலிஸ் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், பேரவை உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.