19th September 2023 17:56:20 Hours
இலங்கை இராணுவ பொலிஸ் சேவை வனிதையர் பிரிவின் 22வது வருடாந்த பொதுக்கூட்டம் சனிக்கிழமை (செப்டம்பர் 16) இலங்கை இராணுவ பொலிஸ் படையணி தலைமையகத்தில் 38 உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
இந்த பொது கூட்டம் இலங்கை பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி பிரியந்திகா டி சொய்சா தலைமையில் நடைபெற்றது.
மங்கள விளக்கேற்றல் நிகழ்வுடன் நிகழ்வு ஆரம்பமானது, அதன் பின்னர் சேவை வனிதையர் கீதம் இசைக்கப்பட்டது. இந் நிகழ்வு முதல் அமர்வில் எதிர்வரும் ஆண்டிற்கான புதிய பொறுப்பாளர்களை நியமிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டது.
இந்த சந்திப்பின் போது, அடுத்த ஆண்டுக்கான உத்தேச திட்டம் மற்றும் பல முக்கிய விடயங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. கடந்த வருடங்களில் சேவை வனிதையர் பிரிவின் சமூக சேவைகளை தொகுத்து வழங்கும் வீடியோ ஆவணப்படம் இரண்டாவது அமர்வின் தொடக்கத்தில் காண்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, செவித்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள தெரிவு செய்யப்பட்ட பொலிஸ் படையணி வீரர்களின் பிள்ளைகளுக்கு பல செவிப்புலன் கருவிகள் வழங்கப்பட்டன.
இராணுவ சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் மேற்பார்வையின் கீழ் இராணுவ சேவை வனிதையர் பிரிவு மூலம் அத்தியாவசிய செவிப்புலன் கருவிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
மேலும், நன்கொடையாக சிறப்பு மருத்துவத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளைக் கொண்ட பொலிஸ் படையணி குடும்பங்களுக்கு தலைவியின் வேண்டுகோளிற்கு இணங்க ரூ. 75,000 வழங்கப்பட்டது.
அன்றைய நிகழ்ச்சியின் மூன்றாவது அமர்வில், "வாழ்க்கை முகாமை" என்ற தலைப்பில் ஒரு விரிவுரை இடம்பெற்றது, இது வாழ்க்கைத் திறன்கள் மற்றும் சுய முகாமை குறித்து கூட்டத்தை பயிற்றுவிப்பதை நோக்கமாகக் கொண்டது. இந்த அமர்வை நிபுணத்துவ ஆலோசகரும் உளவியலாளருமான டாக்டர் சமிந்த வீரசிறிவர்தன நடத்தினார்.
பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் சிப்பாய்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.