19th September 2023 18:09:31 Hours
விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் 27வது வருடாந்த பொதுக்கூட்டம் விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஹிமாலி புஸ்ஸல்ல அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2023 செப்டம்பர் 9, விஜயபாகு காலாட் படையணி தலைமையகத்தில் நடைபெற்றது.
விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதியும் இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதியுமான மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ மற்றும் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் நோக்கங்களை திறம்பட அடைய அனைத்து உறுப்பினர்களிடையே ஒற்றுமை மற்றும் நேர்மறையான அணுகுமுறைகளை வளர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, தலைவி அர்த்தமுள்ள உரையை நிகழ்த்தினார்.
மேலும், நிதி சிரமங்களை எதிர்கொள்ளும் 21 போர்வீரர் குடும்பங்களின் பிள்ளைகளுக்காக பாடசாலை உபகரணங்களும் நன்கொடையாக வழங்கப்பட்டன. மேலும், மே 2009க்கு முன்னர் மனிதாபிமான நடவடிக்கையின் போது பயங்கரவாதிகளின் தாக்குதலில் கால்கள் துண்டிக்கப்பட்ட கோப்ரல் ஒருவரின் சுயதொழிலுக்குத் தேவையான இயந்திரங்களை வாங்குவதற்கு ரூபாய் 30,000.00 பெறுமதியான நிதி நன்கொடையாக வழங்கப்பட்டது.
இறுதியாக, லெப்டினன் கேணல் எச்.டி.சீ. சில்வா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் கலந்துகொண்டு அனைவருக்கும் 'சமூக ஒழுக்கங்கள்' என்ற தலைப்பில் விரிவுரையை வழங்கினார். இந்த ஏற்பாடு இரவு விருந்துடன் முடிவடைந்தது.