19th September 2023 16:53:31 Hours
இயந்திரவியற் காலாட் படையணி சேவை வனிதைர் பிரிவின் தலைவி திருமதி பிரியங்கா விக்கிரமசிங்க அவர்கள் அதிகாரவாணையற்ற அதிகாரி ஒருவரின் வேண்டுகேளுகிணங்க இரட்டைக்குழந்தைகளின் தந்தையான இயந்திரவியற் காலாட் படையணியின் கோப்ரல் ஒருவருக்கு நிதி நன்கொடையை அண்மையில் கையளித்தார்.
இயந்திரவியற் காலாட் படையணி சேவை வனிதையிரானால் மாதந்தோறும் ரூபாய் 10,000/= வைப்புத் தொகையானது புதிதாகப் பிறந்த அவரது இரட்டைக் குழந்தைகளை வளர்ப்பதற்கு ஆதரவாக ஒரு வருட காலத்திற்கு அதிகாரவாணையற்ற அதிகாரி வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும்.
இயந்திரவியற் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியின் வேண்டுகோளுக்கு இணங்க அவுஸ்திரேலியாவில் வசிக்கும் நன்கொடையாளர்களான திரு.கஜித் ராஜபக்ஷ மற்றும் திருமதி.கோசல ரணவீர ஆகியோரால்இந்த நிதியுதவி வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் இயந்திரவியற் காலாட் படையணி படைத்தளபதி மேஜர் ஜெனரல் எம் ஜி டப்ளியு டப்ளியு டப்ளியு எம் சி பி விக்ரமசிங்க ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி, இயந்திரவியற் காலாட் படையணி நிலைய தளபதி பிரிகேடியர் ஏஎம்ஏ அபேசிங்க ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி, இயந்திரவியற் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் பிரதி தலைவி திருமதி.நிலந்தி வனசிங்க ஆகியோருடன் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.