05th August 2022 06:19:09 Hours
இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் மாதாந்த தானம் நிகழ்வு சனிக்கிழமை (30) அம்பலாங்கொடை பொல்வத்தையில் அமைந்துள்ள ‘வருசவிதான முதியோர் இல்லத்தில்’ இடம்பெற்றது.
இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் அனுசரனை மூலம் ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட 18 முதியோர்களுக்கு அன்றைய மூன்று வேளை உணவையும் வழங்கினர். சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.