07th September 2022 17:02:26 Hours
இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் வருடாந்த பொதுக் கூட்டம் 27 ஓகஸ்ட் 2022 பனாகொட இராணுவ பீரங்கி படையணி அதிகாரிகள் உணவகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் போது, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதுடன், அனைத்து பெண்களும் தமது எதிர்கால திட்டங்களை முன்வைத்தனர்.
இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி மனோரி சல்லே மற்றும் உப தலைவி திருமதி ராஜிதா ஜெயசூரிய ஆகியோர் வருடாந்த பொதுக் கூட்டத்தை வழிநடத்தினர். அன்றைய நிகழ்வில் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.