07th September 2022 17:06:08 Hours
இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் மாதாந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி 2022 ஓகஸ்ட் 21 அம்பலாங்கொடை பொல்வத்த ‘வருசவிதான முதியோர் இல்லத்தில்’ முன்னெடுக்கப்பட்டது.
அம்பலாங்கொடை ‘வருசவிதான முதியோர் இல்லத்தின்’ 18 வயது முதியவர்களுக்கு (3 ஆண்கள் மற்றும் 15 பெண்கள் உட்பட) சேவை வனிதையரின் அனுசரணையுடன் அன்றைய தினம் மூன்று வேளை உணவு வழங்கப்பட்டது.
நாட்டில் நிலவும் கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக, இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் சேவை வனிதையரின் குறைந்தபட்ச எண்ணிக்கையிலான உறுப்பினர்களின் பங்கேற்புடன் சுகாதார நெறிமுறைகளை பின்பற்றி நிகழ்வு நடைபெற்றது.