17th October 2022 21:40:15 Hours
இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் 22 செப்டெம்பர் 2022 அம்பலாங்கொடை பொல்வத்த வருசவிதான இல்லத்தில் முதியோருக்கான மாதாந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.
திருமதி குமுதுனி முத்தலிப் அவர்களின் பங்கேற்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட உணவை 18 முதியோருக்கு வழங்கினர். அன்று மாலையில் நடந்த ஒரு தர்ம போதனை முதியோர்களின் மனதை அமைதியாக்கியது.
இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி மனோரி சல்லே, திருமதி நிலுபா மகாதந்திலா, திருமதி குமுதுனி முத்தலிப் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.