06th November 2022 14:33:11 Hours
இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவு தனது மாதாந்த உணவு வழங்கும் திட்டத்தை ஒக்டோபர் 30 அம்பலாங்கொடை வருசவிதான முதியோர் இல்லத்தில் நடாத்தியது.
முதியோர் இல்லத்தில் வசிக்கும் 18 முதியோருக்கு காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி மனோரி சலே மற்றும் இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.