15th December 2022 16:58:13 Hours
இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினரான திருமதி. இல்மா மஜீத் அவர்களின் அனுசரணையுடன், இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் மாதாந்த உபசரிப்பை அம்பலாங்கொட பொல்வத்தை வருசவிதான முதியோர் இல்லத்திற்கு வழங்கியது. ஒவ்வொரு மாதமும், இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி மனோரி சல்லே அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்த சமூக சேவை திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
கரந்தெனிய இராணுவ புலனாய்வு படையணி தலைமையகத்தின் பல இராணுவ புலனாய்வு படையணி உறுப்பினர்கள் இந்த திட்டத்திற்கு உதவினர்.