04th January 2023 07:41:23 Hours
இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் குழுவொன்று 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் திகதி கம்புருபிட்டிய ‘அபிமன்சல-02’ நல விடுதிக்கு புனர்வாழ்வின் கீழ் உள்ள உடல் ஊனமுற்ற போர் வீரர்களைச் சந்திப்பதற்காக விஜயம் செய்தது.
இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி மனோரி சல்லே மற்றும் அவருடன் வந்திருந்த பெண்கள் போர் வீரர்களுக்கு தேவையான விட்டமின்கள் மற்றும் தானியங்கள் நிறைந்த சிற்றுண்டிகளை அளித்தனர். இந் நிகழ்வில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் இணைந்து கொண்டனர்.