25th March 2023 05:34:08 Hours
இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவு 11 மார்ச் 2023 அம்பலம கலுஅக்கலவில் உள்ள ஹோட்டலில் "சைபர் குற்றங்களில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளைத் பாதுகாத்தல்" என்ற தலைப்பில் சிறப்பு விரிவுரையை ஏற்பாடு செய்து சர்வதேச மகளிர் தினத்தை நினைவுகூர்ந்தது.
இந்த நிகழ்வில் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி மனோரி சாலே, பல பெண் அதிகாரிகள் மற்றும் பெண் சிப்பாய்கள் கலந்து கொண்டனர். திருமதி சந்திமா நிரோஷினி அவர்கள் விரிவுரையை நடத்தியதுடன், இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியால் விரிவுரை முடிந்தவுடன் விரிவுரையாளருக்கு சிறப்பு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.