17th September 2023 20:34:30 Hours
கொமாண்டோ படையணியில் கடமையாற்றும் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை (செப்டெம்பர் 09) கணேமுல்ல கொமாண்டோ படையணி தலைமையக விரிவுரை மண்டபத்தில் இடம்பெற்றது.
கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நிமாலி ரணதுங்க அவர்கள் வழங்கிய வழிகாட்டுதல்களின் கீழ் இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் போது, 99 சிவில் ஊழியர்களின் 160 பாடசாலை செல்லும் பிள்ளைகளிடையே பயிற்சி புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டன. அன்றைய தினத்தில் நடைப்பெற்ற நிகழ்வின் போது 21 மாணவர்கள் அடையாள ரீதியாக அந்த பரிசுகளை பெற்றுக்கொண்டனர்.
மேலும், அண்மைக்காலத்தில் தீயினால் வீடு முற்றாக அழிவடைந்த லான்ஸ் கோப்ரல் ஒருவருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. மேலும் ஒரு புதிய வீட்டைக் கட்டுவதற்கு கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவினால் ஆதரவளிக்கப்பட்டது.
கொமாண்டோ படையணி படைத் தளபதியும் 53 வது காலாட் படைப்பிரிவின் தளபதியுமான மேஜர் ஜெனரல் பீஜிபீஎஸ் ரத்நாயக்க ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ, கொமாண்டோ படையணி நிலைய தளபதி பிரிகேடியர் பிஎம்எஸ்கேகே தர்மவர்தன ஆர்டப்ளியு ஆர்எஸ்பீ யுஎஸ்பீ, கொமாண்டோ படையணி பிரிகேட் தளபதி பிரிகேடியர் கே.வி.ஐ.எல் ஜயவீர யுஎஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.