16th September 2023 22:26:12 Hours
14 வது (தொ) இராணுவ பொறியியல் சேவைகள் படையணியின் படையணி தினத்தை ஒட்டி பத்தரமுல்லையில் உள்ள 14 வது (தொ) இராணுவ பொறியியல் சேவைகள் படையணி முகாமில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 11) 'ஒரு வளமான மற்றும் இணக்கமான திருமண உறவு' என்ற தலைப்பில் பட்டறை நடைபெற்றது.
பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியின் அழைப்பின் பேரில் புகழ்பெற்ற மற்றும் அறிவாற்றல் மிக்க வளவாளர்களான திரு. ஹெலசிறி நாவலகே மற்றும் திருமதி ஜெயங்கனி விஜேவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர். 14 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணி கட்டளை அதிகாரி இத்திட்டத்தினை மேற்பார்வையிட்டார்.
திரு.ஹெலசிறி நாவலகே மற்றும் திருமதி.ஜெயங்கனி விஜேவர்தன ஆகியோரின் பெறுமதியான பங்களிப்பை பாராட்டி செயலமர்வு நிறைவடைந்ததன் பின்னர் கட்டளை அதிகாரியினால் அவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த செயலமர்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உட்பட பலதரப்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டதுடன் இது தலைப்பின் பொருத்தம் மற்றும் ஆரோக்கியமான மற்றும் வெற்றிகரமான திருமணங்களை வளர்ப்பதற்கான கூட்டு அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.