31st August 2023 19:49:07 Hours
இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியில் பணியாற்றும் 275 பெண் சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கும் நலன்புரித் திட்டம் இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டது.
பயனாளிகளுக்கு 100 பொதிகளை விநியோகிக்கும் இந்நிகழ்வு புதன்கிழமை (ஓகஸ்ட் 23) பனாகொடை இலங்கை இராணுவ பொது சேவை படையணி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களும், இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் படைத் தளபதியும் நிதி முகாமைத்துவ பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் டபிள்யூபிஎஸ்எம் அபேசேகர ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ மற்றும் இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சாந்தி அபேசேகர ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், பயனாளிகளுக்கு தலா ரூ.6800.00 பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன. விவசாயம் மற்றும் கால்நடை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் பிஎன் மதநாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, சேவை வனிதையர் பிரிவின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு பிரிகேடியர் என் மஹாவிதான கேஎஸ்பீ , விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் சேவை வனிதையர் பிரிவு சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் நிகழ்வில் பங்குபற்றினர்.