14th September 2023 20:13:42 Hours
இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவியின் அழைப்பின் பேரில் ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, கைத்தொழில் அலுவல்கள் அமைச்சு, இலங்கை தரக் கட்டுப்பாட்டு நிறுவனம், கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம், தேசிய வடிவமைப்பு நிலையம் மற்றும் போகஸ் வர்த்தகப் பாடசாலை உட்பட பல்வேறு மதிப்புமிக்க நிறுவனங்களின் பிரதிநிதிகளின் பங்கு பற்றலில் இராணுவக் குடும்பங்களில் பெண்களால் உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருட்களின் சந்தைப்படுத்தல் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு, இலங்கை இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி கருத்தரங்கு ஒன்றை நடத்தினார்.
இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவியின் திருமதி சாந்தி அபேசேகர மற்றும் பிரதி மக்கள் தொடர்பு அலுவலர் ஆகியோர் சனிக்கிழமை (செப்டெம்பர் 9) இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடை படையணியின் இடம் பெற்ற நிகழ்விற்கு தலைமை வகித்தனர்.
கலந்துரையாடலின் போது, அனைத்து படையலகுகளின் பெண்களுக்கு அவர்களது தயாரிப்புகளுக்கான கூடிய வருமானம் ஈட்ட கூடிய வாய்ப்புகள் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்து கற்பிக்கப்பட்டது.