14th September 2023 08:37:42 Hours
இராணுவ போர்க்கருவி படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி பாண்டுனி மார்கிரெட் ரணசின் ரணவக்க அவர்களின் தலைமையில் இலங்கை இராணுவ போர்க்கருவி படையணியின் சேவை வனிதையர், செவ்வாய்க்கிழமை (ஓகஸ்ட் 15) வத்தேகம 'சுரச' சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் 28 சிறுவர்களுக்கு பரிசுப் பொதிகள், உலர் உணவுகள் மற்றும் சுவையான மதிய உணவை வழங்குதல் மூலம் மகிழ்ச்சியையும் வாழ்வாதாரத்தையும் வழங்கினர்.
இராணுவ போர்க்கருவி படையணியின் படைத் தளபதி, இராணுவ போர்க்கருவி படையணியின் நிலையத் தளபதி மற்றும் 4 வது இராணுவ போர்க்கருவி படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோரின் ஆதரவின் மூலம் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இராணுவ போர்க்கருவி படையணியின் சேவை வனிதையரினால் சிறுவர் அபிவிருத்தி நிலையத்திற்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.