25th July 2023 21:51:40 Hours
இராணுவப் புலனாய்வுப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் வருடாந்த பொதுக் கூட்டம் சனிக்கிழமை (ஜூலை 15) கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக் கழகத்தின் தெற்கு வளாக கேட்போர் கூடத்தில் இராணுவப் புலனாய்வுப் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ராஜிதா ஜயசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சேவை வனிதையர் கீதம் இசைக்கப்பட்டதுடன், உயிர்நீத்த போர்வீரர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து, சேவை வனிதையர் பிரிவின் வரவு செலவு அறிக்கை சமர்பிக்கப்பட்டது. இச்சந்திப்பின் போது, புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டதுடன், போர்வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலனுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.