15th March 2022 16:31:37 Hours
இயந்திரவியல் காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் 14 வது வருடாந்த பொதுக்கூட்டம் 05 மார்ச் 2022 அன்று பனாகொட இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையக அதிகாரிகளின் உணவகத்தில் நடைபெற்றது.
இயந்திரவியல் காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தனுஷா வீரசூரிய தலைமையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றதுடன், இக்கூட்டத்தில் சேவையாற்றிய உறுப்பினர்கள் மற்றும் உயிர்த் தியாகத்தை செய்த போர்வீரர்களின் குடும்பங்களின் நலன்சார்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
இக்கூட்டம் கடந்த கால திட்டங்களை மதிப்பாய்வு செய்ததுடன், படைப்பிரிவின் நலன் சார்ந்த பணிகளுக்கு தனித்தனியாக ஆதரவு அளித்து வலுப்படுத்துவதுடன், படையணியின் மேம்பாட்டிற்காக தேவையான, நலன்புரி செயல்பாடுகளை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. செயலாளர் திருமதி நிலாந்தி வனசிங்க மற்றும் 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன், அனைத்து உறுப்பினர்களுக்கும் பங்கேற்பைப் பாராட்டி பரிசுப் பொதிகளும் வழங்கப்பட்டன.
இந் நிகழ்ச்சியின் போது, திருமதி அமா திஸாநாயக்க ஆற்றிய ஊக்கமளிக்கும் விரிவுரையை அனைத்து உறுப்பினர்களும் செவிமடுத்ததுடன், தலைவி அவருக்கு நினைவுப் பரிசு வழங்கி, அவரது பங்களிப்புக்கு நன்றியும் தெரிவித்தார்.