28th April 2022 19:43:08 Hours
இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவினால் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்து விளங்கிய இயந்திரவியல் காலாட் படையணி குடும்பங்களின் பிள்ளைகளின் சாதனைகளைப் பாராட்டி, இயந்திரவியல் காலாட் படையணி தலைமையகத்தில் நடைபெற்ற விழாவின் போது, 6ஆம் வகுப்பில் படிப்பதற்குத் தேவையான பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தனுஷா வீரசூரிய அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களும் கலந்து கொண்டு இயந்திரவியல் காலாட் படையணியின் குடும்பத்தைச் சேர்ந்த 16 பிள்ளைகளுக்கு பரிசுப் பொதிகளை வழங்கினர்.