21st June 2022 15:53:20 Hours
இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவு பொசன் போயா தினத்தை முன்னிட்டு (14) தம்புலுஹல்மில்லவெவ பாடசாலை விளையாட்டு மைதானத்தில் மரவள்ளி கிழங்கு தானம் வழங்கியது.
அன்றைய தினம் 500 கிலோவிற்கும் அதிகமான மரவள்ளி கிழங்கு படையினரால் அவிக்கப்பட்டு, சுகாதார வழிகாட்டுதலின்படி சமூகத் திட்டமாக பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக இராணுவத் தலைமையகத்தின் பிரதி பதவி நிலைப்பிரதானியும் படையணியின் படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய மற்றும் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தனுஷா வீரசூரிய ஆகியோர் கலந்து கொண்டு இந் நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.
இந் நிகழ்வில் நிலைய தளபதி பிரிகேடியர் அனுர அபேசிங்க மற்றும் சேவை வனிதையர் பிரிவின் செயலாளர் திருமதி ஸுவர்ணமாலி ஏக்கநாயக்க மற்றும் சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.