20th October 2022 20:01:03 Hours
தம்புலுஹல்மில்லவெவ இயந்திரவியல் காலாட் படையணி தலைமையகம், அதன் தகுதியான சிப்பாய்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை (2) அம்பலாங்கொடை, கொஸ்கொட இயந்திரவியல் காலாட் படையணி கோப்ரல் ஒருவருக்கு புதிய வீட்டை நிர்மாணிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது.
பிரதி பதவி நிலைப்பிரதானியும் இயந்திரவியல் காலாட் படையணியின் படைத்தளபதி யுமான மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கட்டம் I இன் ஐந்து வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
இயந்திரவியல் காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவினால் நிதியுதவி வழங்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட இரண்டாவது வீட்டை வழங்கும் நிகழ்வில் இயந்திரவியல் காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தனுஷா வீரசூரிய மற்றும் இயந்திரவியல் காலாட் படையணியின் படைத் தளபதியை பிரதிநிதித்துவப்படுத்தி இயந்திரவியல் காலாட் படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் ஏஎம்ஏ அபேசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
முதலாவது இயந்திரவியல் காலாட் படையணியின் தேவையுடைய சிப்பாய் ஒருவரை இத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு, உள்நாட்டில் கிடைக்கும் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி அவரது படையலகு படையினரால் புதிய வீட்டைக் கட்டுவதற்கான தொழில்நுட்ப மற்றும் மனிதவளம் வழங்கப்பட்டது.
கொஸ்கொடவில் நடைபெற்ற வீடு வழங்கும் நிகழ்வில் இயந்திரவியல் காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் செயலாளர் திருமதி ஸுவர்ணமாலி ஏக்கநாயக்க, இயந்திரவியல் காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் செயற்குழு உறுப்பினர்கள், முதலாவது இயந்திரவியல் காலாட் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஏசீஆர் திலகரத்ன மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.