20th November 2022 12:58:22 Hours
இயந்திரவியல் காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தனுஷா வீரசூரிய அவர்கள் 2022 நவம்பர் 12 ஆம் திகதி அத்திடிய 'மிஹிந்து செத் மெதுர'வில் அங்கு வசிக்கும் போர் வீரர்களின் நல்வாழ்வு குறித்து அறிய விஜயம் செய்தார்.
இயந்திரவியல் காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் செயலாளர் திருமதி ஸுவர்ணமாலி ஏக்கநாயக்க, இயந்திரவியல் காலாட் படையணியின் பிரதித் தளபதி, படையணி தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் இந்த விஜயத்தில் கலந்துகொண்டதுடன், போர்வீரர்களுக்கு பரிசுப் பொதிகளும் வழங்கினர்.