Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

11th January 2023 08:24:27 Hours

இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையரின் புதிய தலைவி பதவி ஏற்பு

இயந்திரவியல் காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவி திருமதி ஹிமாலி புஸ்ஸல்ல, தம்புள்ளை, தம்புலுஹல்மில்லேவ இயந்திரவியல் காலாட் படையணியின் தலைமையகத்தில் சமய நிகழ்வுகளுக்கு மத்தியில் வியாழக்கிழமை (ஜனவரி 5) கடமைகளை பொறுப்பேற்றார்.

இயந்திரவியல் காலாட் படையணியின் படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸெல்ல அவர்கள் நியமிக்கப்பட்ட பின்னர் அவர் தலைவி பதவியை ஏற்றுக்கொண்டார்.

நிகழ்வின் போது இயந்திரவியல் காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் செயலாளர் திருமதி ஸுவர்ணமாலி ஏக்கநாயக்க மற்றும் இயந்திரவியல் காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.