24th January 2023 19:36:35 Hours
இயந்திரவியல் காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் வருடாந்த விஜயத்தை சனிக்கிழமை (21) பாங்கொல்ல ‘அபிமன்சல’ நல விடுதியில் வசிக்கும் போர் வீரர்களின் நலம் விசாரிக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டது.
மேற்குப் பாதுகாப்பு படை தலைமையக தளபதியும், இயந்திரவியல் காலாட் படையணியின் படைத் தளபதியமான மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல அவர்கள் வழங்கிய வழிகாட்டுதலின் அடிப்படையில் இத் திட்டம் முன்னெடுகப்பட்டதுடன், இயந்திரவியல் காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஹிமாலி புஸ்ஸல்ல அவர்கள் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்த விஜயத்தின் போது, இயந்திரவியல் காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவினரும் ஒவ்வொரு போர் வீரருக்கும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கியதுடன், சில சிறப்பு பரிசுகளை ‘அபிமன்சல’ நிர்வாகத்திற்கு அன்பளிப்பாக வழங்கினர்.
இயந்திரவியல் காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், நிலைய தளபதி பிரிகேடியர் அநுர அபேசிங்க, சிரேஷ்ட அதிகாரிகள், பணிநிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இசை நிகழ்ச்சி மற்றும் தேநீர் விருந்துடன் நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவு பெற்றன.