31st March 2023 10:04:57 Hours
இயந்திரவியல் காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் 15 வது வருடாந்த பொதுக் கூட்டம் 25 மார்ச் 2023 அன்று தம்புள்ளை தெஹியப்பாவ இயந்திரவியல் காலாட் படையணியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
புதிதாக நியமிக்கப்பட்ட இயந்திரவியல் காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஹிமாலி புஸ்ஸெல்ல அவர்களை இயந்திரவியல் காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் பிரதித் தலைவி திருமதி துல்கா ஹேரத் மற்றும் சிரேஷ்ட நிர்வாக உறுப்பினர்கள் மரியாதையுடன் வரவேற்றனர். மங்கல விழக்கு ஏற்றி நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டதுடன், இந் நிகழ்வில் திருமதி ஹிமாலி புஸ்ஸெல்ல வரவேற்புரையும் ஆற்றினார்.
2023 ஆம் ஆண்டிற்கான இயந்திரவியல் காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவியாக திருமதி ஹிமாலி புஸ்ஸெல்ல அவர்களும் பிரதித் தலைவியாக திருமதி துல்கா ஹேரத் அவர்களும் நியமிக்கப்பட்டனர்.
செயலாளராக திருமதி ஸுவர்ணமாலி ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டதுடன், தற்போதைய கட்டளை அதிகாரிகளின் அனைத்து மனைவியர்களும் திட்டத்தின் உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டனர்.
வருடாந்த பொதுக் கூட்டத்தில் இயந்திரவியல் காலாட் படையணியின் குடும்பங்களைச் சேர்ந்த 48 பிள்ளைகளுக்கு பாடசாலைப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வின் போது, ஹெரிடன்ஸ் கண்டலம உணவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. நலிந்த அபேரத்ன மற்றும் அவரது குழுவினரால் சமையல் செயல்விளக்கமும் நடத்தப்பட்டது.
செயலாளர் திருமதி ஸுவர்ணமாலி ஏக்கநாயக்க அவர்கள் இறுதியில் சேவை வனிதையர் பிரிவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் படையணி நடவடிக்கைகளின் ஆர்வத்திற்கும் பங்களிப்பிற்கும் நன்றி தெரிவித்தார்.