Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

16th June 2023 21:49:15 Hours

இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையரின் வருடாந்த கூட்டத்தில் பரிசு வழங்கள்

இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஹிமாலி புஸ்ஸெல்ல அவர்கள் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி 15 வது இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் வருடாந்த பொதுக்கூட்டம் தம்புலுஹல்மில்லேவ இயந்திரவியல் காலாட் படையணி தலைமையக உணவக வளாகத்தில் நடைபெற்ற போது பாடசாலை மாணவர்களுக்கு அத்தியாவசியப் பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இத் திட்டத்தில் இயந்திரவியல் காலாட் படையணி படையினர் மற்றும் சிவில் ஊழியர்களின் 48 பிள்ளைகள் பாடசாலை உபகரணங்களைப் பெற்றுக் கொண்டனர்.

இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், உறுப்பினர்கள் உட்பட அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டதுடன், இந் நிகழ்வில் உபதலைவி திருமதி துல்கா ஹேரத், செயலாளர் திருமதி ஸுவர்ணமாலி ஏக்கநாயக்க மற்றும் இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.