21st January 2022 09:50:54 Hours
கெமுனு ஹேவா படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி கீதா அத்துகோரள அவர்களின் தலைமையில், கெமுனு ஹேவா படையணி சிப்பாயின் இரண்டு பெண் பிள்ளைகளுக்கு ஒரு வருட காலத்திற்கு மாதாந்தம் ரூபாய் 5000/= பெறுமதியான மருத்துவ உதவியை அவர்களின் மருத்துவ சிகிச்சைக்களுக்காக வழங்கினர்.
கெமுனு ஹேவா படையணியின் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களுடன், திருமதி கீதா அத்துகோரள அவர்கள் 04 ஜனவரி 2022 அன்று சிப்பாயின் வீட்டிற்குச் சென்று முதல் மாத கொடுப்பனவுகள் மற்றும் சில அத்தியாவசிய பாடசாலை எழுதுபொருட்களையும் கையளித்தார். அவர்களின் உபயோகத்திற்காக சுமார் 20,000/= ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது