18th February 2022 08:44:39 Hours
கெமுனு ஹேவா சேவை வனிதையர் பிரிவின் வருடாந்த பொதுக் கூட்டம் பெப்ரவரி 05 அன்று கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் நடைபெற்றது.
இந்த அமர்வின் போது, கெமுனு ஹேவா படையணியின் தெரிவு செய்யப்பட்ட நான்கு வீரர்களின் ஒன்பது பிள்ளைகளுக்கு 2022 ஆம் ஆண்டிற்கான புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டன.
கெமுனு ஹேவா சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி கீதா அத்துகோரள, ஏனைய உறுப்பினர்களுடன் வருடாந்த பொதுக் கூட்டத்தில் பங்குபற்றினார்.